Search
Wednesday 19 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சுரிமை மறுப்பும் விவிலியம் கூறும் அரசியலும்

நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சுரிமை மறுப்பும்  விவிலியம் கூறும் அரசியலும்

வன்னி மாவட்ட உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டுள்ள கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாவலன் வார ஏடு, விவிலியம் கூறுகின்ற அரசியலை மேற்கோட்டியுள்ளது.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்கும் இனத்தின் தலைவர்களுடன் சேர்ந்து, தனது இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பேச்சுரிமையை மறுப்பது, முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின்னரான அடிமை விசுவாசம் என்றும் அந்த ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்ட்ப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பாதுகாவலன் வார இதழின் ஆசிரியர் தலையங்கம் ‘நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சுரிமை மறுப்பும் விவிலியம் கூறும் அரசியலும் ‘ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு-

ஜனநாயகம், சுதந்திரம் என்ற கோட்பாடுகள ஐரோப்பிய நாட்டு அறிஞர்களினால் எழுதப்பட்டது. அனால் விவிலியம் அதற்கு முந்தியது. விவிலியம் முன்வைக்கின்ற மனித சுதந்திரம் இன்றைய உலக நடைமுறைகளுக்கு ஒப்பானது. அது கத்தோலிக்க சமயம் என்பதைக் கடந்து மனித விழுமியங்ளை சொல்லிக் கொண்டுக்கின்றது.

உலகத்தின் இன்றைய அரசியல் நிலையை சீர்ப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை விவிலியத்தின் ஒவ்வொரு வசனங்களும் முன்வைக்கின்றது. அவற்றை சமகால நிலைமைக்கு ஏற்ற பொருள் விளக்கத்துடன் நோக்க வேண்டியது கிறிஸ்த்தவனுடைய கடமை.

விவிலியத்தில் அரசியலுக்குப் பல உதாரணங்கள் உண்டு குறிப்பாக ‘தன்னைத்தான் உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தபடுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தபடுவான்’ (லுக்கா 14:11).

ஆகவே தலைவர்;கள் என்று கூறப்படுவேர் நிச்சயம் இந்த வாக்கியத்தை படிக்க வேண்டும். எங்களுடைய அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை உயர்த்துகின்றனர். மெய்ப்பாதுகாவலர்;களுடனும் படை பட்டாளங்களுடனும் மக்களை சந்திக்க வருகின்றனர்.

தமது கட்சியில் இருக்கும் ஏனைய உறுப்பினர்களின் உயர்ச்சியைக் கூட சில அரசியல் தலைவர்கள் விரும்புவதில்லை. தன்னைத் தாழ்த்தி மற்றவர்களை உயர்த்துகின்ற தலைவன், எங்கள் மத்தியில் இல்லை என்பது குறைபாடல்ல. புரிதல் இல்லாததன் வெளிப்பாடுதான் அந்த நிலைமைக்குக் காரணம். வன்னி மாவட்ட உறுப்பினர் ஒருவருக்கு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் பேசுவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது.

யாரால்? கட்சித் தலைவரால். சரி நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உரையாற்றுவதற்கான நேர ஒதுக்கீட்டை சபாநாயகர் ஏனைய கட்சித் தலைவர்க்ளின் ஒத்துழைப்புடன் செய்திருக்கலாம். ஆனால் சபாநாயகரும் அவ்வாறு செய்யவில்லை. ஏன்? ஒருவர் பேசுவதை தடுப்பதால் அவர் பேசவிருந்த கருத்து, மக்களை போய்ச்சேராது என்று நினைப்பது சிறுபிள்ளைத் தனமானது. மற்றவர்களை பேச விடுங்கள். அவர்களின் கருத்தைக் கேளுங்கள் என்றுதான் விவிலியம் கூறுகின்றது.

இதைத்தான் ஐரோப்பியர் காலத்தில் யேசு சங்கத்தை உருவாக்கியவர்களும் சொன்னார்கள். யாருடை பேச்சையும் யாரும் தடுக்க முடியாது. நீ தலைன் என்றால் உனக்கு யாரும் கட்டுப்பட வேண்டியதல்ல. நீதான் கட்டுப்பட வேண்டும். அதுதான் தலைமை. அதுதான் சரியான வழிகாட்டல்.

ஆனால் இங்கே அந்த வழிகாட்டல் இல்லை. விடுதலை வேண்டி நிற்கும் சமூகம் ஒன்றின் விடுதலை இயக்கத்தைப்பார்த்து ஜனநாயக வழிக்கு வர வேண்டும் என்று அறைகூவல் விடுத்த தலைவர்கள், இன்று அடுத்தவனின் பேச்சுரிமையை, சட்டத்தைக் காண்பித்து மறுப்பது எந்த வகையான நியாயம்? அதுவும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்கும் இனத்தின் தலைவர்களுடன் சேர்ந்து தனது இனத்தை சேர்ந்த ஒருவருக்கு பேச்சுரிமையை மறுப்பது முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின்னரான அடிமை விசுவாசம் என்றே கூறலாம். ‘என் வாய்க்குக் காவல் வையும் என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்’ என்று விவிலியம் கூறுகின்றது. அதாவது தட்டுத்தறிமாறி நான் மற்றவர்களை மனம் நோகும் படி எதையும் பேசிவிடக் கூடாது என்பதும், மற்றவர்களின் பேச்சுரிமையை தடுப்பதற்காக நான் கூறுகின்ற வார்த்தைகள், காரணங்கள் சரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் விவிலியத்தின் அந்த வாக்கியத்துக்கான பொருள்கோடலை எடுத்துக் கொள்ளலாம்.

அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சுரிமையை தடுப்பதற்கு சொல்லப்பட்ட காரணங்;கள் அவரை மாத்திரம் மனம் நோக வைக்கவில்லை. தமிழச் சமூகத்தின் 70 ஆண்டுகால அரசியல் போராட்டத்தையும் மலினப்படுத்தியுள்ளது எனலாம். ஆகவே தலைவர்;கள் என்று சொல்லப்படுபவர்களின் வாய்க்கு காவல் வைக்கப்படவில்லை. உதடுகளின் வாசல் காத்துக் கொள்ளப்படவுமில்லை.
யேசுநாதருக்கு முன்பாக மாத்திரமல்ல மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவர்;களாக செயற்;பட வேண்டும் என்பதுதான் விலிலியத்தின் அறைகூவல். அவர் என்ன பேசப்போன்றார் என்பதை அறியாமல், தெரியாமல் அவரது பேச்சை தடுப்பதற்காக சொல்லப்பட்ட காரணங்கள், விடுதலை வேண்டி நிற்கும் சமூகம் ஒன்றின் தலைமைக்கான பண்பு அல்ல.
சட்டங்கள் வேறு. மனித நேயம் வேறு. ஆனாலும் உலக நாடுகளின் அரசியல் யர்ப்புக்களில் உள்ள பல சட்டங்கள் விவிலியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதையும் தலைவர்கள் புரி;ந்துகொள்ள வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *