Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாடு பூராகவும் இன்று முதல் ஊரடங்கு பகல் நேரத்தில் தளர்வு

நாடு பூராகவும் இன்று முதல் ஊரடங்கு பகல் நேரத்தில் தளர்வு

இன்று செவ்வாய்க்கிழமை முதல் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் பகல் நேரத்தில் தளர்த்தப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இரண்டு மாதங்களின் பின்னர் இன்றைய தினம் முதற்தடவையாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதுடன் அதன்பின்னர் நாளை காலை 4 மணி வரையில் ஊரடங்கு தொடரவுள்ளது. தினமும் இவ்வாறே ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான போக்குவரத்துகளை மேற்கொள்ள முடியாது. அத்தியாவசிய தேவைகள் மற்றும் தொழிலுக்கு செல்வோர் மாத்திரமே கொழும்புக்கு செல்ல முடியும்.
இந்நிலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தாலும் சுகாதார நடைமுறைகள் அவ்வாறே பேணப்படும் எனவும் இதனை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *