Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாட்டின் பல இடங்களில் நாளை உயர் வெப்பநிலை நிலவக்கூடும்

நாட்டின் பல இடங்களில் நாளை உயர் வெப்பநிலை நிலவக்கூடும்

நாட்டின் பல இடங்களில் நாளை உயர் வெப்பநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அந்த வகையில் மேல், வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அதிகளவிலான வெப்பநிலை நிலவக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது.இந்த காலப்பகுதியில் குழந்தைகள், நான்கு வயதுக்குற்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடற்பருமன் கூடியவர்கள், நோயாளர்கள் ஆகியோர் தொடர்பாக அதிகூடிய கவனம் தேவை எனவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் அதிக வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *