Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாட்டின் – வீட்டின் பொருளாதாரத்தை கட்டியெடுப்ப எங்களுக்கு மட்டுமே முடியும் : ரணில்

நாட்டின் – வீட்டின் பொருளாதாரத்தை கட்டியெடுப்ப எங்களுக்கு மட்டுமே முடியும் : ரணில்

இரண்டாவது கொரோனா அலை தொடர்பாக உலக சுகாதார தாபனத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதும் அதற்கு முகம்கொடுக்கும் வகையில் தற்போதைய அரசாங்கத்திடம் எந்தவித வேலைத்திட்டங்களும் இல்லையெனவும் ஆனால் அதற்கான வேலைத்திட்டங்கள் தங்களிடம் இருப்பதாகவும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோமாக இருந்தால் எங்களுக்கு நாட்டை அந்த வைரஸில் இருந்து காப்பாற்ற முடியுமெனவும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்தில் கட்சி ஆதரவாளர்களுடான டிஜிட்டல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் வீட்டினதும் , நாட்டினதும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தேர்தலே. தற்போதைய அரசாங்கத்திடம் அதற்கான வேலைத்திட்டங்கள் இல்லை. கடந்த 8 மாதங்களாக அது தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. ஆனால் எங்களிடம் வேலைத்திட்டங்கள் உள்ளன. அதற்கான தகுதியையும் நாங்களே கொண்டுள்ளோம். எங்களின் ஒரே நோக்கம் ஆட்சியை கைப்பற்ற வேண்டும். என்பதாகவே இருக்கின்றது. மக்களை தவிர வேறு யாருடனும் எங்களுக்கு ஒப்பந்தங்கள் கிடையாது.
இதேவேளை இரண்டாவது கொரோனா அலை தொடர்பாக உலக சுகாதார தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அரசாங்கம் அது தொடர்பாக எந்த நடவடிக்கைகையும் முன்னெடுக்காது இருக்கின்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் 2ஆவது கொரோனா அலையையும் கட்டுப்படுத்துவோம். என தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *