Search
Friday 4 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 58 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் எனவும் ஏனைய மூவர் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தற்போது உள்ள சூழ்நிலையில், முழு நாட்டையும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவித்தாலும் இயல்பு வாழ்க்கைக்கு ஏதுவான வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.அரச மற்றும் தனியார் நிறுவனங்களை வழமைப் போல் இயக்க முடியும். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நிறுவனங்களின் பிரதானிகளின் கடமை.

அதிகளவான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் தினமும் சேவைக்கு வரக் கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை பிரதேச சுகாதார அதிகாரிகள் தீர்மானிப்பார்கள். இவ்வாறு வரும் ஊழியர்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பேணுவது கட்டாயம் என்பதுடன் அடிக்கடி உடல் உஷ்ணத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *