Search
Sunday 17 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாட்டில் 2 வாரங்களாக முடங்கிப் போயுள்ள அரச பல்கலைக்கழகங்கள்!

நாட்டில் 2 வாரங்களாக முடங்கிப் போயுள்ள அரச பல்கலைக்கழகங்கள்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காராணமாக கடந்த இரண்டு வாரகாலமாக நாடு பூராகவும் அரச பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் முடங்கி போயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பளம் மற்றும் பல்வேறு கொடுப்பனவுகள் தொடர்பாக முரண்பாடுகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் சகல பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தன.
ஆனால் இவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாமையினால் அந்த போராட்டம் இரண்டு வாரத்தை கடந்தும் தொடர்ந்து வருகின்றது. இதனால் பல்கலைக்கழகங்களில் இந்த காலப்பகுதிக்குள் நடத்தப்படவிருந்த சகல பரீட்சைகளும் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழகங்களில் மற்றைய நடவடிக்கைகளும் பின்போடப்பட்டுள்ளன. அத்துடன் சகல பல்கலைக்கழங்களிலும் நிர்வாக செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *