Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாட்டை நேசிப்பார்களாக இருந்தால் 19ஐ இல்லாது செய்ய வேண்டும் : ஜனாதிபதி

நாட்டை நேசிப்பார்களாக இருந்தால் 19ஐ இல்லாது செய்ய வேண்டும் : ஜனாதிபதி

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னர் ஆட்சிக்கு வருபவர்களோ 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாது செய்ய வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால் அவர்கள் 19ஆவது திருத்தத்தை இல்லாது செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஊடக பிரதானிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் பல விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அமெரிக்காவுடன் இலங்கை கையெழுத்திடவுள்ள உத்தேச ஷோபா மற்றும் எக்‌ஷா உடன்படிக்கைகளை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *