Search
Saturday 29 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நான் எனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதற்கு இரண்டு தலைப்பாம்பு அல்ல- குமார வெல்கம

நான் எனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதற்கு இரண்டு தலைப்பாம்பு அல்ல- குமார வெல்கம

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்துரைக்கும்போது நான் எனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதற்கு இரண்டு தலைப்பாம்பு அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த முடிவு சரியானது அல்ல. இது சுதந்திரக் கட்சியின் இருப்புக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கும்.தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால், சுதந்திரக் கட்சியினர் அந்தக் கட்சியில் இணைவார்கள். அதற்குப் பின்னர் சுதந்திரக் கட்சி இருக்காது” என்று மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரித்துள்ளார்.

ஸ்அவர் மேலும் தெரிவிக்கையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் அதனைக் கைவிட்டாலும், நான் பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ளமாட்டேன்.ஐக்கிய தேசியக் கட்சியுடனோ, பொதுஜன பெரமுனவுடனோ இணைந்துகொள்ளமாட்டேன். சுதந்திரமாக இருக்கவே எதிர்பார்க்கிறேன். தனியாக இந்த நிலைப்பாட்டை எடுக்கும்போது தனியாகவே பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முடிவு, சுதந்திரக் கட்சியை அழித்து விடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *