தலைப்பு செய்திகள்

”நான் சூழ்ச்சிகளில் ஈடுபடவில்லை” : சஜித்

”நான்  சூழ்ச்சிகளில் ஈடுபடவில்லை” : சஜித்

மக்களின் விருப்பத்துடனேயே நான் பதவிகளை பெற்றுக்கொள்வேன் இதனை தவிற வேறு வழிகளில் பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லையென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வலமுல்லை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். அதில் உண்மைகள் கிடையாது. ஒரு போதும் கட்சியையும் கட்சி தலைவரையும் காட்டிக்கொடுக்கும் வகையில் நடந்துக்கொள்ள மாட்டேன். 71 தடவைகள் பிரதமர் பதவி வேண்டாமென கூறியவன் நான் இதற்காக நான் அந்த பதவியையும் அதற்கு மேலான பதவியையும் எதிர்ப்பார்க்கவில்லையென்று கூறிவிட முடியாது. மக்களின் விருப்பத்துடன் அதற்கு செல்லவே விரும்புகின்றேன். இதனை விடுத்து வேறு வழிகளில் அந்தப் பதவிக்கு செல்லப் போவதில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *