Search
Monday 23 October 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாளையும் நாளை மறுதினமும் யாழ். இந்துவில் தேசிய தமிழ்த்தின விழா

நாளையும் நாளை மறுதினமும்   யாழ். இந்துவில் தேசிய தமிழ்த்தின விழா

வடமாகாணத்தில் முதல் தடவையாக தேசிய தமிழ்த்தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாசார விழா 14ம், 15ம் திகதிகளில் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
மத்திய கல்வி அமைச்சும், ஐங்கரன் மீடியா சொலுஷன் நிறுவனமும் இணைந்து நடத்தும் தேசிய தமிழ்த்தின விழா மற்றும் பாடசாலைகள் கலாசார விழாவில் 14ம் திகதி முதலாம் நாள் நிகழ்வில் தேசிய தமிழ்த் தினப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாண வர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மற்றும் 9 மாகாணங்களினதும் ஆளுநர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக நிகழ்வின் ஒழுங்கமைப் பாளர்களால் கூறப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர் களுக்கு பரிசில்களை வழங்குவார்.
தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்வு கள் மாலை 7 மணி வரையில் நடைபெறும.; இதனோடு தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பேச்சாளர் சுகிசிவமும் கலந்து கொள்வார். 15ம் திகதி 2ம் நாள் நிகழ்வில் பாடசாலை களின் கலாசார நிகழ்வுகள், கலை நிகழ்வு கள் நடைபெறும்.
அதனோடு தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பரதநாட்டிய அக்கடமியான “பாரத கலாஞ்சலி” வழங்கும் ஓம் சிவா முருகா பரதநாட்டிய நிகழ்வும் நடைபெறும். இப் பரதநாட்டிய நிகழ்வில் 20ற்கும் மேற்பட்;ட இந்திய பரத நாட்டிய கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ள னர்.
மேலும் வடமாகாணத்தில் திறம்பட செயற்பட்ட கலைஞர் கள், எழுத்தாளர்கள், விளை யாட்டு வீரர்கள், கல்விமான் கள், வியாபார துறையில் மிளிர்ந்தவர்கள் மற்றும் சிறந்த சேவையாற்றிய ஊடக வியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படவுள் ளார்கள்.
தொடர்ந்து தென்னிந்தியா வில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொள்ளும் பட்டிமன்ற மும் நடைபெறவுள்ளது.
இதேவேளை ஆரம்ப நிகழ்வு உள்ளிட்ட சகல நிகழ் வுகளும் பிரமாண்டமான முறையில் ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வுகளில் பிர தானமாக யாழ்.மத்திய கல் லூரியில் இருந்து யாழ்.இந்து கல்லூரி வரையில் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் பண்பாட்டு ஊர்தி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மேலும் 14ம், 15ம் திகதி களில் நடைபெறவுள்ள நிகழ்வு களில் சுமார் 300ற்கும் மேற் பட்ட பாடசாலைகளின் மாண வர்கள் கலந்து கொள்ளவுள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது. (15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *