Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாவற்குழி சமித்தி சுமண விகாரை நேற்று திறந்து வைக்கப்பட்டது

நாவற்குழி சமித்தி சுமண விகாரை நேற்று திறந்து வைக்கப்பட்டது

நாவற்குழியில் அமைக்கப்பட்ட சமித்தி சுமண விகாரை நேற்று பௌத்த மத சம்பிரதாயங்களுக்கு அமைய திறந்து வைக்கப்பட்டது. பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் நாவற்குழி ரயில் நிலையத்திற்கு அருகாமையில், யாழ்ப்பாண நகரின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றத்திற்கு அருகில் கட்டப்பட்ட மிகப்பெரிய விகாரையே நேற்று திறந்து வைக்கப்பட்டது.இவ்விகாரை திறப்பு விழாவில், புனித தாது எடுத்து வரப்பட்டது முதல் விகாரையின் மேல் வைக்கும் வரை, இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு அளித்திருந்தனர்.

வடமேல் மாகாணம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு, சாது எனும் நாமத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட விகாரையின் மேல் , புனித தாது வைக்கப்பட்டது. இந்த புனித தாதுவை, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி தர்ஷண ஹெட்டியாராச்சி, உட்பட முப்படைகளின் தளபதிகள், உட்பட விகாராதிபதிகள், விகாரையின் மேல் வைத்தனர். அதன் பின்னர், பௌத்த சமய விதிமுறைகளின் படி, பிரித் ஓதப்பட்டது.

விகாரைக்கான புனித தாது குருணாகல் நெவகட செல்கிரி விகாரையில் இருந்து நேற்று மாலை எடுத்து வரப்பட்டது. நாவற்குழி சந்தியில் இருந்து, விகாரைக்கான புனித தாது மற்றும், பௌத்த மத அனுஷ்டான முறைப்படி, தீப் பந்தம், பௌத்த கொடி, ஆலவட்டங்களுடன், பிக்குகளின் தலைமையில் புனித தாது, விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

குறித்த குடியேற்றத்தில் சுமார் 9 சிங்கள குடும்பங்களே வசிப்பதாக குறித்த பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள தென்மராட்சி பிரதேச சபையின் தலைவர் வாமதேவன் கந்தையா தெரிவித்துள்ளார். இந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள குடியேற்றத்தில் இராணுவத்தினால் 28 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அதில் சுமார் 20 குடும்பங்கள் அங்கு தங்கியிருப்பதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.(15)Navatkuli-vihara-140719-seithy (1) Navatkuli-vihara-140719-seithy (4)Navatkuli-vihara-140719-seithy (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *