Search
Thursday 23 May 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நியூசிலாந்தின் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூடு: 49 பேர் பலி

நியூசிலாந்தின் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூடு: 49 பேர் பலி

நியூஸிலாந்தின் கிறிஸ்சேர்ச் நகரத்தில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் குறைந்து 49 பேர் கொல்லப்பட்டு 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் சத்தம் கேட்டவுடன் மின்சார விபத்து என்று நினைத்ததாகவும் பின்னர் விபரீதத்தை உணர்ந்ததாகவும் கூறிய ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டபோது பள்ளிவாசலில் மக்கள் சிதறி ஓடியதாகவும் பலர் காயங்களுடன் கீழே விழுந்ததாகவும் தெரிவித்தார்.

இரண்டு பள்ளிவாசல்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுளள்து. மொத்தமாக எத்தனை பேர் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று உறுதிசெய்யபபடவில்லை. ஆனால் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர் இந்த தாக்குதலுக்கான காரணத்தை எழுதிவைத்துள்ளார். அதில் அவர் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும் நிலைப்பாடு உடையவர் என்று தெரியவந்துள்ளது. அதேவேளை, தான் தாக்குதல் நடத்துவதையும் அவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ உடை அணிந்து அவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மற்றொரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் இந்த சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளார்களா என்பது உறுதிபப்டுத்தப்படவில்லை.

1552628223512 (2) 1552628223512 New 1 New


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *