தலைப்பு செய்திகள்

நியூசிலாந்து தாக்குதலை அடுத்து மயிரிழையில் உயிர் தப்பிய பங்களாதேஸ் அணி நாடு திரும்புகிறது

நியூசிலாந்து தாக்குதலை அடுத்து மயிரிழையில் உயிர் தப்பிய பங்களாதேஸ் அணி நாடு திரும்புகிறது

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ள பங்களாதேஸ் கிரிக்கட் அணி நாடு திரும்பவுள்ளது.

வீரர்கள் மிகவும் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உடனடியாக நாடு திரும்ப விரும்புவதாகவும் அங்குள்ள பங்களாதேஸ் ஊடகவியலாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அல் நூர் என்னும் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாளை நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாடுவதற்கு இந்த அணி அங்கு சென்றிருந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *