Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் பலியானமை குறித்து வட மாகாண முதலமைச்சர் கவலை தெரிவிப்பு

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் பலியானமை குறித்து வட மாகாண முதலமைச்சர் கவலை தெரிவிப்பு

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் நேற்று மாலை நல்லூரில் இடம்பெற்ற சம்பவத்தில் பலியானமை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த சனிக்கிழமை நல்லூரில் நடைபெற்ற தாக்குதலின் போது உயிர் நீத்த பொலிஸ் சாஜன்ட் சரத் ஹேமசந்திரவின் மறைவு எம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த போது உயிர் நீத்த பொலிஸ் அலுவலரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் அதே நேரத்தில் வன்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அருமந்த ஒரு உயிரைப் பறித்தமையால் அன்னாரின் குடும்பம் பலவித இன்னல்களுக்கும் இடர்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி வந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களின் உள்ளெண்ணம் பற்றித் தாம் ஆராய்ந்து வருவதாக வடமாகாண உப பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவருக்குப் பணித்துள்ளேன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *