Search
Monday 24 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜானாதிபதிக்கும் , பிரதமருக்கும் அழைப்பாணை

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜானாதிபதிக்கும் , பிரதமருக்கும் அழைப்பாணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இவர்களின் போலி கையொப்பத்தை பயன்படுத்தி முன்னாள் ஐ.தே.க செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க வெளியிட்ட போலி ஆவணமொன்று தொடர்பாக வழக்கு தொடர்பாகவே இவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் ஆஜராகுமாறு சாட்சியாளர்களான ஜனாதிபதிக்கும் , பிரதமருக்கும் இதற்கு முதல் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களின் கடமைகள் காரணமாக அவர்களால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாதுள்ளதாக அவர்கள் தரப்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் தெரிவித்த நிலையில் அதனை கவனத்தில் கொண்ட நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணையை விடுத்து டிசம்பர் 4ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *