Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நீர்கொழும்பு பெரியமுல்லையிலுள்ள ஹோட்டலில் மோதல் : ஒருவர் பலி

நீர்கொழும்பு பெரியமுல்லையிலுள்ள ஹோட்டலில் மோதல் : ஒருவர் பலி

நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த ஹோட்டலுக்குள் வந்த 6 பேர் கொண்ட குழுவொன்று அங்கு மது அருந்துவதறற்கு முயற்சித்துள்ள நிலையில் அந்த ஹோட்டலின் உரிமையாளர் அதற்கு அனுமதிக்காத நிலையில் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளரையும் மற்றும் அதன் ஊழியர்களையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் இதன்போது படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் பயணித்த வான் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *