Search
Saturday 23 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நுணாவிலில் குடியிருப்பிற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது

நுணாவிலில் குடியிருப்பிற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது

நேற்று காலை குடியிருப்பாளர் தனது காணியைத் துப்பரவு செய்தபோது குண்டு காணப்பட்டதையடுத்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு பாதுகாப்பினை ஏற்படுத்திவிட்டு சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்து யாழ்.விசேட அதிரடிப் பொலிஸார் மூலம் அப்புறப்படுத்தி குண்டினை செயலிழக்கச் செய்ய அனுமதி வழங்குமாறு கோரியிருந்தனர்.
நீதிமன்ற பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை அறிக்கையினைப் பார்வையிட்டு அனுமதி வழங்கியதையடுத்து விசேட அதிரடிப் பொலிஸார் குண்டினை மீட்டு கொண்டு சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *