Search
Sunday 8 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நுணாவில் பகுதியில் மின் விளக்குகள் அடித்து நொருக்கல்

நுணாவில் பகுதியில் மின் விளக்குகள் அடித்து நொருக்கல்

நேற்று இரவு நடுநிசி வேளையில் நுணாவில் மத்தி வனுவில் சாலை பகுதிக்குள் நுழைந்த ஐவர் கொண்ட குழுவென்று வீடொன்றின் முன்பாகப் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கை அடித்து நொருக்கி அணைத்துவிட்டு வெளிக் கதவை இரும்புக் கம்பிகாளல் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
வீட்டுக்காரரின் உதவிக் குரல் கேட்டு ஓடிவந்த சிலர் திருடர்களின் இரும்புகளின் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அங்கிருந்த நீர் இறைக்கும் இயந்திரத்தையும் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.
அதே கும்பல் நடுநிசி 12.30 மணியளவில் நுணாவில் மேற்கு மணங்குணாய் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடொன்றின் வெளிக்கதவையும் அடித்து சேதமாக்கி உள்ளே செல்ல முற்பட்ட வேளையில் அயலவர்கள் ஓடிவரவே அங்கிருந்து தப்பியோடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *