Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நு.ஹோம்மூட் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதாக அமைச்சர் தெரிவிப்பு

நு.ஹோம்மூட் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதாக அமைச்சர் தெரிவிப்பு

நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹோல்புறூக் கோட்டம்  03 நு.ஹோம்மூட் தமிழ் வித்தியாலய கட்டடிட சுவர்கள் இடிந்து விழ கூடிய ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.

 இங்கு 100 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இப்பாடசாலை தரம் 01 முதல் 05 வரையிலான வகுப்புகள் நடைபெறுகின்றது.

 கடந்த வாரம் பெய்த கடும் மழையால் இக்கட்டிடம் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தது.

 இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயந்த நிலையில் பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

 இக்கட்டிடம் தொடர்பாக மத்திய மாகாண சபை விவசாயத்துறை அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவிக்கையில்.

 இப்பாடசாலை தொடர்பாக தகவல் எனக்கு கிடைத்துள்ளது. இப்பாடசாலையை பார்வையிடுவதற்காக அமைச்சின் அதிகாரிகளை அனுப்பிவைத்துள்ளேன் அவர்கள் பாடசாலை கட்டிடத்தினை பார்வையிட்டு சரியான அறிக்கையினை எனது அமைச்சிக்கு சமர்பித்தபின் புதிய கட்டிடம் அமைப்பதுக்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

 தற்போது மலையக பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால் மாணவர்களின்  பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெறறோர்களும் மாணவர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *