நோக்கங்கள் நிறைவேறும் வரை அமெரிக்க படையினர் சிரியாவிலிருந்து வெளியேற மாட்டார்கள் என அமெரிக்க தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகளிற்கான அமெரிக்க தூதுவர் நிக்கிஹேலி இதனை தெரிவித்துள்ளார்.
சுpரியாவை பொறுத்தவரை அமெரிக்காவிற்கு மூன்று இலக்குகள் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இரசாயன ஆயுதங்களை சிரியா அரசாங்கம் பயன்படுத்தாது என்ற நிலையை உறுதிசெய்வது ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்வது மற்றும் ஈரான் என்ன செய்கின்றது என்பதை கண்காணிப்பதற்கான தளத்தை ஏற்படுத்துவது ஆகியவையே அமெரிக்காவின் இலக்குகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா துருப்பினர் மீண்டும் நாடு திரும்புவதை உறுதிசெய்வதே எங்கள் இலக்கு ஆனால் அதற்கு முன்னர் எங்கள் நோக்கங்கள் நிறைவேறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

Previous Postஇந்தியாவின் மற்றுமொரு நம்பிக்கை நட்சத்திரம்- சஞ்சுசாம்சன்
Next Postமீண்டும் சிரியாவை தாக்கினால் பாரிய குழப்ப நிலை ஏற்படும்- புட்டின் எச்சரிக்கை