Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பகிரங்க விவாதத்திக்கு அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்தும் சுமந்திரனிடம் இருந்து பதில் இல்லை – சட்டத்தரணி க.சுகாஸ்

பகிரங்க விவாதத்திக்கு  அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்தும் சுமந்திரனிடம் இருந்து  பதில் இல்லை –  சட்டத்தரணி க.சுகாஸ்

பகிரங்க விவாதத்திக்கு வருமாறு அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்தும் சுமந்திரனிடம் இருந்து இன்னும் பதில் இல்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.சுமந்திரனுக்கு முதுகெலும்பிருந்தால் தேசியத் தலைவருடைய ஆயுதப் போராட்டம் சரியா? தவறா? என்ற பகிரங்கமாக பொதுத் தளத்திலே ஒரு பகிரங்க விவாதத்திக்கு நான் தயாராக இருக்கின்றேன் முடிந்தால் வாருங்கள் கருத்துக்களால் மோதி பார்ப்போம் என்று தெரிவித்திருந்தேன்.24 மணித்தியாலங்கள் கடந்துவிட்டது இதுவரை அவரிடமிருந்து எத்தகைய பதில்களும் வரவில்லை. நான் அதிலே சொல்லியிருந்தேன் முதுகெலும்பு இருந்தால் வாருங்கள் என்று, சிலநேரத்தில் அதனால்தான் அவர் வரவில்லையோ தெரியவில்லை.

ஆனால் நாம் ஒரு விடையத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இது சுமந்திரனுடைய அண்மைக்கால கருத்தோ அல்லது இன்றைய கருத்தோ கிடையாது. அவருடைய நிகழ்ச்சி நிரலே இதுதான்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய ஆயுதப் போராட்டமும், அதன் வளிமுறையும் பிழையென்று சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு நேற்று எங்களுடைய கண்டனத்தை தெரிவித்து அவருக்கு அத்தகைய கருத்தை தெரிவிப்பதற்கு அருகதையோ, தகுதியோ கிடையாது என்ற விடையத்தையும் தெரிவித்திருந்தோம்.குறித்த அழைப்புக்கு 24 மணித்தியாலங்கள் கடந்தும் எந்தவொரு பதிலும் வராத நிலையிலேயே நேற்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *