தலைப்பு செய்திகள்

பங்களாதேஷ் அணி நடந்துக்கொண்ட விதம் – ICC விசாரணை

பங்களாதேஷ் அணி நடந்துக்கொண்ட விதம் – ICC விசாரணை

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான போட்டியின் போது அங்கிருந்த கண்ணாடி கதவுக்கு சேதமேற்படுத்தியது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபையினால் பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு முறையிட்டுள்ளது.
இதேவேளை இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போட்டியில் வெற்றிப் பெற்றதன் பின்னர் பங்களாதேஷ் அணியினரால் ஓய்வறையின் கண்ணாடி கதவுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *