இலங்கையில் இடம்பெறும் முக்கோண ரி 20 தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஸ்வீரர்கள் நடந்துகொண்ட விதம் கவலைக்குரிய ஏற்றுக்கொள்ள முடியாதது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்;டுச்சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
நடுவரின் முடிவிற்கு எதிராக இவ்வாறு நடந்துகொள்வது கவலைக்குரியது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பங்களாதேஸ் அணியினர் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டனர் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூர்ய குற்றம்சாட்டியுள்ளார்
அவர்கள் தங்களின் அறையை உடைத்து சேதப்படுத்திய படத்துடன் ஜெயசூர்ய இந்த கருத்தை டுவிட்;டரில் பதிவு செய்துள்ளார்.
எனினும் சில நிமிடங்களின் பின்னர் அவர் அதனை அழித்துள்ளார்.
பங்களாதேஸ் வீரர்கள் நடந்துகொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது – திலங்க சுமதிபால கண்டனம்
Mar 17, 20180

Previous Postஅவசரகால சட்டம் நீக்கப்பட்டது
Next Postஆங்சாங் சூகியை அவுஸ்திரேலியாவில் விசாரிக்க முடியாது – சட்டமா அதிபர் தெரிவிப்பு