தலைப்பு செய்திகள்

பணத்திற்கு பின்னால் ஓடும் வீரர்களுக்கு முன்னுதாரணமான விராத்கோலி

பணத்திற்கு பின்னால் ஓடும் வீரர்களுக்கு முன்னுதாரணமான விராத்கோலி

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராத்கோலி செய்திகளுக்கான ஒரு பாத்திரமாகவே இருக்கின்றார். வழமைப்போன்று தற்போது உலகின் பார்வை அவர் பக்கம் திரும்பியுள்ளது.
பணத்திற்கு பின்னால் ஓடும் விளையாட்டு வீரர்களுக்கு மத்தியில் அவர் வித்தியாசமான ஒருவராக இருப்பதே இதற்கு காரணமாகும்.
அவரை பிரபல குளிர்பான கம்பனியொன்று தமது குளிர்பான விளம்பரத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்ய முயற்சித்துள்ளது. ஆனால் அவ்வாறான குளிர்பான வகைகள் உடல் சுகாதாரத்திற்கு பாதிப்பானவை என்ற காரணத்தினால் அவர் அதனை நிராகரித்துள்ளார். கோடிக்கணக்கான பணம் தருவதாக தெரிவித்த போதும் அவர் அதனை நிராகரித்துள்ளார்.
இவ்வாறாக மக்களை எண்ணி அவர் விளம்பரத்தை நிரகரித்து பணத்திற்கு பின்னால் ஓடும் வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார்.
இதேவேளை இந்திய அணியினர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதல் நடத்தபட்ட உடல் தகுதி பரிசோதனையில் விராத்கோலியே முதலிடம் வகித்துள்ளார். இதன்படி உலகில் மிகவும் சிறப்பான பிட்னஸ் உள்ள அணியாக இந்திய அணியே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. -(3)virat-kohli-afp_806x605_61505395672 maxresdefault-3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *