Search
Tuesday 18 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பணத்தை திருப்பிக் கொடுத்து பிணை முறி மோசடியாளர்கள் தப்பிக்க முயற்சி : விட மாட்டோம் என்கிறது சு.க

பணத்தை திருப்பிக் கொடுத்து பிணை முறி மோசடியாளர்கள் தப்பிக்க முயற்சி : விட மாட்டோம் என்கிறது சு.க

பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்கள் சிவில் வழக்கினூடாக பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றார்கள். இதற்கு இடமளிக்காது அவர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிணை முறி மோசடியாளர்கள் சிவில் வழக்கின் மூலம் பணத்தை திருப்பிக் கொடுத்து அத்துடன் வழக்கு நடவடிக்கைகளை முடித்துக்கொள்வதற்கே திட்டமிடுகின்றனர். ஆனால் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக குற்றத்திற்கு தண்டனையை வழங்காது இருந்துவிட முடியாது. குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனையை வழங்க வேண்டும். தண்டனை கோவையில் உள்ளவாறு தண்டனை வழங்கப்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *