Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பதுளையில் அரச நிறுவன கழிப்பிடத்திற்குள் இரகசிய கமரா வைத்தவர் சிக்கினார்

பதுளையில் அரச நிறுவன கழிப்பிடத்திற்குள் இரகசிய கமரா வைத்தவர் சிக்கினார்

பதுளை பகுதியில் அரச நிறுவனமொன்றின் கழிப்பிடத்தில் கையடக்க தொலைபேசி மூலம் இரகசிய வீடியோ எடுத்ததாக அந்த நிறுவனத்திலேயே பணியாற்றும் 40 வயது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பெண்கள் செல்லும் கழிப்பிடத்திற்குள் குறித்த தொலைபேசியை இரகசியமான முறையில் மறைத்து வைத்து வீடியோ பதிவை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கழிப்பிடத்திற்குள் சென்ற ஊழியர் ஒருவர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் உபகரணங்களை வைத்திருக்கும் வாளியொன்றுக்குள் கையடக்க தொலைபேசியொன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அதனுடன் தொடர்புடைய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *