Search
Tuesday 17 September 2019
  • :
  • :

பயங்கரவாத விசாரணைப்பிரிவு பணிப்பாளர் தொடர்பாக விசாரணை ஆரம்பம்!

பயங்கரவாத விசாரணைப்பிரிவு பணிப்பாளர் தொடர்பாக விசாரணை ஆரம்பம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவையும் கொலை செய்வதற்கு சதி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக பொலிஸ் மா உத்தரவின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவினால் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடலொன்றை அடிப்படையாக கொண்டே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊழல் எதிர்ப்பு படையின் முக்கியஸ்தர் ஒருவர் குறித்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இது கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஊடக சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் வைத்து இவர்களை கொலை செய்ய சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் பொலிஸ் மா அதிபருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தகவலை வெளியிட்ட தமது பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்துமாறு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியவர்கள் நேற்றைய தினம் பொலிஸில் முறைப்பாட்டையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *