தலைப்பு செய்திகள்

பரீட்சையில் ஆள்மாராட்டம்: ஒருவர் கைது

பரீட்சையில் ஆள்மாராட்டம்: ஒருவர் கைது

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உகன பரீட்சை மத்திய நிலையத்தில் வைத்து, நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய, கணக்கியல் பரீட்சைகளுக்காகவே இவ்வாறு மாணவர் ஒருவர் ஆள்மாராட்டம் செய்துள்ளார்.

இது குறித்து பரீட்சை மேற்பார்வையாளரால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, ஆள்மாராட்டம் செய்ய வந்த 32 வயதான குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

இன்று அவரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உகன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *