Search
Wednesday 13 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பலத்த சூறாவளியாக விருத்தியடையும் தாழமுக்கம்

பலத்த சூறாவளியாக விருத்தியடையும் தாழமுக்கம்

வங்காள விரிகுடா கடற்பரப்பில் காணப்பட்ட ஆழமான தாழமுக்கம் ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.8N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.3 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒருபலத்த சூறாவளியாக விருத்தியடைவதுடன் அதற்கு அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு மிகப்பலத்த சூறாவளியாக விருத்தியடைந்து வடக்கு – வடமேற்கு திசையில் பங்களாதேஷ் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இது அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக மேலும் விருத்தியடைந்துமேற்கு – வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வட அகலாங்கு 13N – 22N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85E – 91E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, மிகவும் கொந்தளிப்பான கடல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *