Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பலநாள் திருட்டில் ஈடுபட்ட ஒற்றைக்கால் திருடன் வவுனியா பொலிஸாரால் கைது

பலநாள் திருட்டில் ஈடுபட்ட ஒற்றைக்கால் திருடன் வவுனியா பொலிஸாரால் கைது

வவுனியா பிரதேசத்தில் இரவு வேளைகளில் பல்வேறு திருட்டுக்களில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒற்றைக்கால்களையுடைய நபர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்திரவின் போரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கையில்,

வவுனியா சாளம்பைக்குளத்தை சேர்ந்த முகமட் சப்றின் என்ற நபர் 2015.7.9 அன்று சிந்தாமணிபிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் திருடிய போது வீட்டின் உரிமையாளரினால் அடையாளம் காணப்பட்டிருந்தார். இவரை கடந்த 26.6.2016 அன்று வவுனியா பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டபோது பல்வேறான திருட்டு சம்பவங்களுடன் அவருக்கு தொடர்பிருந்தது தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் தகவலின் படி 2015.12.16 அன்று குட்செட்விதியில் வர்த்தகர் ஒருவரின் விட்டில் திருடியமை, 2016.3.6 அன்று குட்செட் வீதியில் இரவு வேளையில் வீடொன்றில் திருடியமை, 2016.4.7 அன்று தோணிக்கல் சிவன்கோவில் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து திருடியதுடன் 2016.6.20 ஆம் திகதி மீண்டும் குட்செட் விதீயில் வீடொன்றில் திருடிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டு தோணிக்கல் சிவன்கோவில் பகுதியில் வீடொன்றில் திருடி வீட்டின் மதிலால் குதித்தபோது மதில் சரிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த குறித்த நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் ஒரு காலை இழந்தமையையும் தெரிவித்திருந்தார். இந் நிலையில் குறித்த சந்தேக நபரை வவுனியா நீதிமன்றில் திங்கள் கிழமை ஆஜர்ப்படுத்தியபோது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்திரவிட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பு மோதரை மாதம்பிட்டியை சேர்ந்த நகை விற்பனை முகவர் ஒருவரை கைது செய்த பொலிஸார் அங்கிருந்து சந்தேக நபரினால் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நகைகளில் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த நகை முகவரை நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை ஆஜர்ப்படுத்திய நிலையில் அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நடவடிக்கைகளை வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்ணான்டோ ஆகியோரின் அறிவுறுத்திலின் பிரகாரம் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனியின் மேற்பார்வையில் வவுனியா குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ரட்ணாயக பொலிஸ் சார்ஜன்ட் (42521) ஜேசுதாஸ், கான்ஸ்டபிள்களான (36508) என்.எம். ஜெயபிரகாஸ், (36693) ஜெயதிலக, (5239) கருணாதிலக, (69679) விஜயபண்டா ஆகியோர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *