Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று பேச்சு ஆரம்பம்

பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று  பேச்சு ஆரம்பம்

வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று பேச்சு சற்று முன்னர் யாழில் ஆரம்பமாகியுள்ளது.இந்த சந்திப்பு யாழ். பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள ‘ப்றைட் இன்’ விடுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது.குறித்த சந்திப்பில் பொது அமைப்புகளின் சார்பில் கிருஸ்தவ மதகுரு ஒருவரும் சின்மிய மிசன் வதிவிட ஆச்சாரி சிதாகானந்தா சுவாமிகளும் யாழ். பல்கலைக்கழக அரசறிவியற்றுறைப் பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் அ.ஜோதிலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன், க.சுகாஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் ரெலோ சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ந.சிறீகாந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.Tamil-Party-3-384x288

ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.இந்த சந்திப்பில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *