தலைப்பு செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களின் வாகன பேரணி கொழும்பை வந்தடைந்தது : கொழும்பில் வீதிகளில் கடும் வாகன நெரிசல்

பல்கலைக்கழக மாணவர்களின் வாகன பேரணி கொழும்பை வந்தடைந்தது : கொழும்பில் வீதிகளில் கடும் வாகன நெரிசல்

சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக கடந்த 15ஆம் திகதி 5 பிரதேசங்களிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட வாகன பேரணி கொழும்பை வந்தடைந்தது.
இதனால் கொழும்பில் சகல வீதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் , மாலபே சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகள் பொறிக்கப்பட்ட லொறிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்ததுடன் மாணவர்கள் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பட்டில் கண்டி , இரத்தினப்புரி , அனுராதபுரம் , குளியாப்பிட்டிய மற்றும் கராப்பிட்டிய பிரதேசங்களிலிருந்து இந்த ஆர்ப்பாட்ட வாகன பேரணி கடந்த 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *