Search
Thursday 20 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பல மாவட்டங்களில் டெங்கு எச்சரிக்கை!

பல மாவட்டங்களில் டெங்கு எச்சரிக்கை!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு. கம்பஹா,களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் அனர்த்தம் உள்ள மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
குடம்பி விஞ்ஞான ஆய்வு அறிக்கை மற்றும் சமீபத்தில் தொற்று நோய் தொடர்பான தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டெங்கு அனர்த்தம் உள்ள மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் கூடுதலாக காணப்படுகின்றது. இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு , சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து கூட்டாக டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீடு, பாடசாலை, வேலைத்தளம், கட்டிட நிர்மாண பகுதி, நிறுவனம், மத வழிபாடு தலங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்கள் உள்ளிட்டவை டெங்கு நுளம்புகள் பரவக் கூடிய அசுத்த நீர் தேங்கும் இடமாக காணப்படும்.
இதனால் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய நிலைமை காணப்படும்.இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு சுற்றாடலை அகற்றவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கு பொது மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கயமானதாகும். இது தொடர்பில் பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று டெங்கு ஒழிப்பு பிரிவு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
ஆகக் குறைந்தது வாரத்தில் ஒரு முறை 30 நிமிடங்கள் தமது வீட்டை சுற்றியுள்ள சுற்றாடலில் நுளம்புகள் பெருக் கூடிய அல்லது பெருகும் இடங்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதனை உடனடியாக சுத்தம் செய்தல் வேண்டும்.
இதே போன்று கால அவகாசம் இல்லாத சந்தர்ப்பத்தில் நுளம்புகள் பெருகாதிருக்க கூடிய சூழ்நிலையை முன்னெடுக்க வேண்டும். இதற்கு தேவையான தொழில் நுட்ப விடயங்கள் மற்றும் சுகாதார தகவல்களை பிரதேச பொது மக்கள் பரிசோதகர்கள் அல்லது மேலதிக தகவல்களை சுகாதார வைத்திய அதிகாரியிடம் பெற்றுக்கொள்ள முடியும். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *