Search
Monday 16 September 2019
  • :
  • :

பளை வைத்தியருடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது

பளை  வைத்தியருடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் கடந்த 18 ஆம் திகதி பளை சட்ட வைத்திய அதிகாரி சிவரூபன் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யபட்ட நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த வைத்தியருடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மூவரை கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.இந்நிலையில் இதனுடன் தொடர்பிலேயே இன்றைய தினம் பளை பகுதியில் வைத்து மேலும் இருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த இருவரையும் பளையில் வைத்து கைதுசெய்துள்ளதாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *