Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த கோரி பாராளுமன்றத்தில் பிரேரணை

பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த கோரி பாராளுமன்றத்தில் பிரேரணை

பழைய முறைமையிலேயே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று தனிநபர் பிரேரணையொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.
இதன்படி பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத் திருத்தம் தொடர்பான விடயங்கள் பிரேரணையில் காணப்படுகின்றன.
அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின்போது இது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பழைய தேர்தல் முறைமையில் மாகாணத் தேர்தல்களைத் தற்போது நடத்த முடியுமான என்று ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக எதிர்வரும் 23ஆம் திகதி முதல் உயர்நீதிமன்றம் ஆராய்ந்து 30ஆம் திகதிக்குள் அந்த தீர்ப்பை ஜனாதிபதியிடம் அனுப்பி வைக்கவுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *