Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பஸ்களுக்கான ஒழுங்கையில் ஆட்டோ , மோட்டார் சைக்கிள் பயணிப்பதற்கு பஸ் சங்கம் எதிர்ப்பு

பஸ்களுக்கான ஒழுங்கையில் ஆட்டோ , மோட்டார் சைக்கிள் பயணிப்பதற்கு பஸ் சங்கம் எதிர்ப்பு

கொழும்பு நகரில் பிரதான வீதிகளில் இன்று முதல் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இடது பக்க ஒழுங்கையிலேயே பயணிக்க வேண்டுமென பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஒழுங்கை பஸ்களுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் மேற் குறிப்பிட்ட வாகனங்களும் பயணிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று முதல் கொழும்பு வீதிகளில் முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் இடப்பக்க ஒழுங்கையிலேயே பயணிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பொலிஸாரின் இந்த அறிவிப்புக்கு தனியர் பஸ் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
பஸ்களுக்கான ஒழுங்கையில் முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் பயணிக்கும் போது விபத்துக்கள் ஏற்படக் கூடுமெனவும் இதனால் இந்த நடைமுறையை நீக்கிக் கொள்ள வேண்டுமெனவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *