Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பஸ் மிதிப் பலகையில் பயணித்தவர்களுக்கு நடந்த சோகம்

பஸ் மிதிப் பலகையில் பயணித்தவர்களுக்கு நடந்த சோகம்

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸொன்றின் மிதிபலகை உடைந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடுகண்ணாவை வளைவு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் பஸ்ஸின் நடத்துனரும் பயணியொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்குளிய டிப்போவுக்கு சொந்தமான குறித்த பஸ் கடுகன்னாவ பகுதியில் வளைவொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென முன்பக்க மிதிப்பலகை உடைந்துள்ளதாகவும் இதன்போது மிதிப்பலகையில் பயணித்தவர்கள் பஸ்ஸின் முன்பக்க சில்லில் சிக்குண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் குறித்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கடுகன்னாவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -(3)62100066_417315765785408_132930590725898240_n 62135245_417315749118743_9158541575695892480_n 62229140_417315742452077_4604904823412752384_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *