Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்ய அணிகள் முன்வரவேண்டும்- சப்ராஸ் அகமத் வேண்டுகோள்

பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்ய அணிகள் முன்வரவேண்டும்- சப்ராஸ் அகமத் வேண்டுகோள்

பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்வது குறித்த தங்கள் எண்ணத்தை உலக கிரிக்கெட் அணிகள் மாற்ற வேண்டும் பாக்கிஸ்தானிற்கு அவை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சப்ராஸ் அகமத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாக்கிஸ்தானில் இடம்பெற்ற மேற்கிந்திய அணிக்கு எதிரான ரி20 தொடரை பாக்கிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியதை தொடர்ந்தே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அணிகள் இனிமேல் காரணங்களை முன்வைக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் இன்றைய போட்டியை பார்ப்பதற்கு கூட பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர் பாக்கிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் என்பதை பாக்கிஸ்தான் மக்;கள் நிருபித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் பாதுகாப்பு காரணங்களிற்காக பாக்கிஸ்தான் செல்ல முடியாது என எந்த அணியும் தெரிவிக்காது என நான் கருதுகின்றேன் இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் பாக்கிஸ்தானில் சர்வதேச போட்டிகள் முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *