Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டியது

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டியது

கொவிட் 19 தொற்று வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலைமையால் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளன.
நாளை தினத்தில் அதிபர் , ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு செல்லவுதுடன் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் உயர்தரம் , சாதாரதண தரம் மற்றும் 5ஆம் தர மாணவர்களுக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்பின்னர் படிப்படியாக மற்றைய வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் பாடசாலைகள் ஆரம்பிபக்கப்பட்ட பின்னர் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் சுகாதார துறை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.
சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று சுகாதார பிரிவினர் பெற்றோரை அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன மாணவர்களக்கு முககவசம் அணிவதற்கு தேவையான நடவடிக்கைகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இதேபோன்று பாடசாலைகளில் மாணவர்கள் கைகளை கழுவுதற்கு வசதிகளை செய்தல் , இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றில் அடிக்கடி கவனம் செலுத்துதல் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுகாதாரப் பிரிவினர் வழங்கிய சுற்றறிக்கை மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய, பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த மேலும் தெரிவித்தார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *