Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி

பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி

பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி வழங்குதவற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

அடுத்து வரும் சில வாரங்களில் அது நடைமுறைக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனூடாக பாடசாலை மாணவர்களுக்கு பல பிரதிபலன்கள் கிடைக்கும் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் அறநெறி கல்வியை பயிலும் பௌத்த தேரர்களையும் காப்புறுதி செய்வதாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி நோய் காரணமாக தங்கி சிகிச்சை பெறும் பௌத்த தேரர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா படி 30 நாட்கள் வரை 30,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த காப்புறுதி திட்டம் அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *