Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையை தொடர்ந்து 30பேர் தனிமைப்படுத்தல்

பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையை தொடர்ந்து 30பேர் தனிமைப்படுத்தல்

இலங்கையில் இதுவரை தொற்று கண்டறியப்பட்ட இரண்டாயிரத்து 882 பேரில் இன்னும் 213 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையை தொடர்ந்து 30பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த மாணவன், இராஜாங்கனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரின் வீட்டிற்கு அருகிலுள்ள பகுதியிலேயே வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.எனினும் இரண்டாவது பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலேயே அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என தீர்மானிக்கப்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *