Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல் நீங்கவில்லை – பொதுமக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் : என்கிறார் பொன்சேகா

பாதுகாப்பு அச்சுறுத்தல் நீங்கவில்லை – பொதுமக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் : என்கிறார் பொன்சேகா

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைவடையவில்லையெனவும் அரசியல்வாதிகள் கூறுவதை நம்பாது சுயமாக சிந்தித்து செயற்படுமாறு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் முன்னாள் இராணுவ தளபதியான பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் தெரிவுக்குழு முன்னிலையில் கூறும் போது பயங்கரவாத அச்சுறுத்தல் 99 வீதம் இல்லாது போயுள்ளதாக தெரிவித்திருந்த போதும் அண்மையில் சவுதி அரேபியிலிருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 5 பேரும் மற்றும் கண்டி பிரதேசத்தில் கைதாகிய 2 பேரும் தற்கொலை தற்குதல்களுக்கு பயிற்சிகளை பெற்றவர்கள் எனவும் இதனால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைவடையவில்லையெனவும் மக்கள் இது தொடர்பாக சிந்தித்து செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *