Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாதுகாப்பு உத்தரவாதம் கோரினார் ஆட்ட மத்தியஸ்த்தர்

பாதுகாப்பு உத்தரவாதம் கோரினார் ஆட்ட மத்தியஸ்த்தர்

இலங்கை இந்திய அணிகளிற்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவது ஓரு நாள் போட்டியின் போது இடம்பெற்ற அசம்பாவிதங்கள் அடுத்த இரு போட்டிகளின் போதும் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதத்தை வழங்குமாறு ஆட்டமத்தியஸ்தர் அன்டி பைகிரொவ்ட் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் இதனை உறுதிசெய்துள்ளதுடன் இது தொடர்பில் அவசர கூட்டங்களை கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்
இந்த கூட்டங்களை தொடர்ந்து என்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்பது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரி பொதுமக்களிற்கு சில விடயங்களை அறிவுறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் கொழும்பில் நடைபெறும் போட்டிகளில் இவ்வாறான குழப்பங்கள் இடம்பெறாது என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *