Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் : விசாரணையின் இறுதி நாள் இன்று

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் : விசாரணையின் இறுதி நாள் இன்று

பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீண்டும் மூன்றாவது நாளாக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
நேற்று முன் தினம் 04ம் திகதி ஆரம்பமான விசாரணையின் இறுதிநாள் இன்றாகும்.
பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *