Search
Thursday 9 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாராளுமன்ற கலைப்பு – பொதுத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுமா? தீர்ப்பு இன்று

பாராளுமன்ற கலைப்பு – பொதுத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுமா? தீர்ப்பு இன்று

பாராளுமன்ற தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமை , பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் அது தொடர்பான தீர்ப்பு ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் அறிவிக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற தேர்தலை ஜுன் 20ஆம் திகதி வரையில் ஒத்தி வைத்தமை அரசியலமைப்புக்கு முரணானது எனவும் , பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதத்திற்குள் கூட்டப்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் அதனை கலைத்த வெளியிட்ட வர்த்தமானி அரசியலமைப்புக்கு முரணானது எனவும் தீர்ப்பளிக்குமாறும் இதன்படி இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில் அவற்றுக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி கடந்த 10 தினங்களாக இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதுடன் அவற்றை விசாரணைக்கு எடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று அறிவிக்கப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *