தலைப்பு செய்திகள்

பாலச்சந்திரன் , இசைப்பிரியா இராணுவத்தினரால் கொல்லப்பட்டமைக்கு ஆதாரமில்லை என்கிறார் மகிந்த

பாலச்சந்திரன் , இசைப்பிரியா இராணுவத்தினரால் கொல்லப்பட்டமைக்கு ஆதாரமில்லை என்கிறார் மகிந்த

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனையும் மற்றும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவையும், இராணுவம் கைதுசெய்து சுட்டுக்கொன்றமைக்கு எந்தவித ஆதாரமும் இல்லையெனவும் போலிக் காணொளிகளையும், புகைப்படங்களையும் வைத்து படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என்றும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிடம், இந்திய ஊடகவியலாளர்கள் போர்க்குற்றம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த புலிகள் அமைப்பின் 12500 போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்துள்ளதனையும் நினைவுபடுத்தியுள்ளார். இப்படிச் செய்த தன் மீதும், தமது போர் வீரர்களான படையினர் மீதும் சில சர்வதேச அமைப்புகளும், சில நாடுகளும் போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்துவது நியாயமா என்றும் கேள்வி எழுப்பினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் புலம்பெயர் புலிகள் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே, நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். எனவே, சிலத் தீர்மானங்களை வைத்து தமது படையினரை எவரும் தண்டிக்க முடியாது என்றும், இதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *