Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாலித்த தேவரபெரும பிணையில் விடுதலை

பாலித்த தேவரபெரும பிணையில் விடுதலை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் குறித்த 6 பேரும், ஒரு இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று (16) அறிவித்துள்ளது.

பிரதி அமைச்சர் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் இன்று (16) மத்துகம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது மத்துகம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி மத்துகம, ஜேபட் பிரதேசத்தில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள மயானத்தில் அடக்கம் செய்த சம்பவம் ஒன்று தொடர்பில் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *