Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாலித தேவரப்பெரும உள்ளிட்ட 5 பேருக்கு விளக்க மறியல்

பாலித தேவரப்பெரும உள்ளிட்ட 5 பேருக்கு விளக்க மறியல்

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும உள்ளடங்களாக 5 பேர் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 19ஆம் திகதி களுத்துறை தெவுவன பகுதியிலுள்ள தோட்டமொன்றில் உயிரிழந்த நபரொருவரை அடக்கம் செய்வதற்காக அந்த தோட்ட உரிமையாளர் இடத்தை வழங்குவதற்கு அனுமதி மறுத்ததுடன் அதற்கான உத்தரவையும் அவர் பெற்றிருந்தார்.
இது தொடர்பாக பொலிஸார் அங்கு நல்லடக்கம் செய்வதற்கு தடையுத்தரவையும் பிறப்பித்திருந்தனர். எவ்வாறாயினும் பிரதி அமைச்சர் உயிரிழந்தவரின் சடலத்தை அந்த பகுதியில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கையெடுத்திருந்தார். இவ்வாறான நிலைமையிலேயே அவர் உள்ளிட்ட 5 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *