Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிக்குகளின் அடாவடிக்கு எதிராக இன்று நீராவிடியடியில் போராட்டம்

பிக்குகளின் அடாவடிக்கு எதிராக இன்று நீராவிடியடியில்  போராட்டம்

தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் இணைந்து முல்லைத்தீவு நீராவிடிய பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணியில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இதன்போது, சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் இன் பெருமெடுப்பிலான போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.இதேவேளை, இன்று சட்டத்தரணிகள் வடமாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதுடன், வடக்கு சட்டத்தரணிகள் முல்லைத்தீவு கவனயீர்ப்பு போராட்டத்திலும் பங்குபற்றுகிறார்கள்.

அத்துடன் இன்று காலை 11 மணிக்கு முல்லைத்தீவு பழைய வைத்தியசால முன்பாக ஒன்று திரண்டு, பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று, அங்கு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அரசாங்கத்திற்கான மகஜரை மாவட்ட செயலரிடம் வழங்கப்படும். ஐ.நா சபைக்கான மகஜரும் கையளிக்கப்படவுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *