Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு

பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு

தீவுக்கூட்டங்களை கொண்ட நாடான பிஜியின் லம்பசா நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அமெரிக்கா புவியியல் ஆராய்ச்சி மைய தகவலின் படி உள்ளூர் நேரப்படி இரவு 8.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். தற்போது வரை சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

பசுபிக் கடலில் ஆஸ்திரேலியாவுக்கு மேல் வலது புறத்தில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்கள் தான் பிஜி தீவு . பிஜி தீவு கூட்டங்களில் ஒன்றான எண்டோய் தீவின் வடகிழக்கே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. (15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *